செய்திகள்

தஞ்சைப் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியநாயகி உடனுறை பொருவுடையார் கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. இதன் பின்னர் இன்று காலை 7.30 மணி முதல் 8.00 மணிக்குள் மேள தாளம் முழுங்க திருமறைமந்திரம் ஓத கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து நாளை (13-ம் தேதி) மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலமும், 14-ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் ஊர்வலமும், 15-ல் விநாயகருக்கு சந்தகாப்பு அலங்காரமும், 16-ம் தேதி சுப்பிரமணியர் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், 17-ம் தேதி சுப்பிரமணியர் சந்த காப்பும், 18-ல் நால்வர் பல்லக்கில் புறப்பாடும் நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான 15-ம் நாளான 26-ம் தேதி சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளி, திருத்தே வடம்பிடித்தல் நடைபெறுகிறது. 29-ல் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT