செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

தினமணி

ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் இடங்களில் மிவும் முக்கிய இடமாகக் கருதப்படுவது பவானி கூடுதுறை. பவானி, காவிரி, அமுத நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்தான் பவானி கூடுதுறை. 

இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. நாளை ஆடிப்பெருக்கு விழா பவானி கூடுதுறையில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் நாளை ஆதிகாலையிலேயே கூடுதுறையில் குவிகிறார்கள். 

இவர்கள் பொங்கிவரும் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரதை வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தங்களது மணமாலையை ஆற்றில் விட்டு வழிபாடு நடத்துவார்கள். 

சுமங்கலிப் பெண்கள் புதுத் தாலிக்கயிறு அணிவார்கள். கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவேண்டியும் வழிபடுவார்கள். 

விவசாய பெருமக்கள் தங்களின் விவசாய நிலைகளை  செழிக்க வைக்கும் காவிரி தாயை வணங்கி மகிழ்வார்கள். பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு பவானி கூடுதுறையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT