செய்திகள்

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா

தினமணி

திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடி பரணி விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
 ஆறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், வேன், பேருந்துகள் மூலம் முருகப்பெருமானை வழிபட கோயிலுக்கு வருகின்றனர். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக் கிருத்திகை விழா தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆடிபரணி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
 அதைத்தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 
இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 5) ஆடிக் கிருத்திகை விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் மு.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT