செய்திகள்

வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளை (ஆக. 11) பொதுமக்கள் புனித நீராடல் செய்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆடி, தை அமாவாசை நாள்களில் வேதாரண்யம் சன்னதிக் கடல் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு செய்து வழிபடுவது வழக்கம். 

இதில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள். 
இதையடுத்து, வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிக்கர்ணிகை தீர்த்தக் குளம், வேதங்கள் நான்கும் நீராடியதாகக் நம்பப்படும் வேதாமிர்த ஏரி ஆகியவற்றிலும் மக்கள் நீராடுவர். 

நீராடலுக்குப் பிறகு கோடியக்கரை சித்தர் கோயில், ராமர்பாதம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் மக்கள் வழிபடுவார்கள். 
நிகழாண்டு, ஆடி அமாவாசையொட்டி அதிகாலை தொடங்கி வேதாரண்யம், கோடியக்கரை கடல் பகுதியில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT