செய்திகள்

நாளை வரம் தரும் வரலட்சுமி விரதம் மறந்துவிடாதீர்கள்! 

தினமணி

நாளை வரலட்சுமி விரதம் அனுஷ்க்கப்படுகிறது. வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை அனுஷ்டித்து வழிபடும் மிகச் சிறப்பான விரதமாகும். இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். 

சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் லக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. இந்த விரதத்தை மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். 

இவ்விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் லக்குமிதேவி வீட்டினுள் வாசம் செய்வாள். இல்லத்தில் செல்வம் செழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பாக்கிய லட்சுமியின் அருளினால் மக்கட்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் விரும்பி அனுஷ்டிக்கின்றனர். வீட்டில் அனுஷ்டிக்க இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்வச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். லட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், பொறுமை மிக்கவள் என்றும் வேதம் கூறுகிறது. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நிச்சயம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT