செய்திகள்

வயது அதிகரித்தாலும் வாலிபத்தை இழக்காதவர்கள் இந்த ராசிக்காரர்கள்! 

DIN

ஜோதிடத்தின் முதல் ராசி மேஷம். தமிழ் மாதங்களில் சித்திரை மாதத் துவக்கம் இந்த மேஷ ராசியில் தான் ஆரம்பமாகிறது. 

மேஷராசியின் அதிபதி பரத்வாஜ முனிவரின் மகனும், மங்களக்காரகன், பூமிக்காரகன் என்று வர்ணிக்கப்படுகின்றன செவ்வாய் தான். செவ்வாயை முருகனின் அம்சமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. பஞ்சபூத தத்துவங்கனில் அக்னியைக் குறிக்கும். 

ராசி அதிபதி செவ்வாய் என்பதால் தன் சொந்த வீட்டில் ஆட்சிப் பலம் பெறுகிறார். அதனால் அவரால் உண்டாகும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம். 

இது ஒரு ஆண்ராசி. அதனால் தானோ என்னவோ, இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் ஆண்களின் குணத்தை அதிகம் பெற்றிருப்பார்கள். நிர்வாகத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் மேஷ ராசியில் பிறப்பவர்கள் அதிக பருமனும் இல்லாமல், ஒல்லியும் இல்லாமல் சட்டம் போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள். கம்பீரமான தோற்றம் இருக்கும். வயது அதிகரித்தாலும் வாலிபத்தை இழக்காத தோற்றம் கொண்டவர்கள். 

இனிமையாகப் பேசக்கூடியவர்களாக இருந்தாலும், குரலில் ஒரு கண்டிப்பும், கறார் குணமும் கலந்தே இருக்கும். இரக்கக் குணமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல வைராக்கிய குணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் முதலிடத்தைப் பற்றிய கனவு எப்போதும் இருக்கும். கடைசிவரை போராடும் குணம் நிறைந்த இவர்களுக்கு வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் மனம் தளராமல் போராடும் குணம் மிக்கவர்கள்.

மேஷராசியில் பிறந்தவர்கள் பூமி, காணி நிலம் அமையும் வாய்ப்புகள் அதிகம் பெறுவார்கள். ஆள் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அரசாங்க ஊழியர்களாகவும், அரசுவழி நன்மை பெறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அரசாங்க கௌரவம் தேடிவருமாம். 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் சூன்ய மாதமாகும். அதனால் சித்திரை மாதத்தில் எந்த  சுபகாரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

SCROLL FOR NEXT