செய்திகள்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம்: காய், கனிகளை சுவாமிகள் காணும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தினமணி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் திருமாளிகையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய், கனிகளை சுவாமிகள் பார்க்கும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியதையொட்டி, காலை ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்று பகல் பத்து மண்டபம் சேருதல் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீபெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
 பின்னர் பச்சை பரப்பக் கடாக்ஷித்தல் நிகழ்ச்சிக்காக, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சேர்த்தியில் மூலஸ்தானத்திலிருந்து திருமாளிகைக்கு புறப்பாடு நடைபெற்றது. அப்போது வேதபிரான் பட்டரை கோயில் மரியாதைகளுடன் அழைத்து வந்தனர். மாளிகையில் பரப்பி வைக்கப்பட்டிருந்து பச்சைக் காய்கறிகள், கனிகளை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்க்கும் வைபவம் நடைபெற்றது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT