செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.95 கோடி

DIN


ஏழுமலையான் உண்டியல் வருமானம் ஞாயிற்றுக்கிழமை ரூ.2.95 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.95 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.15 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

82,179 பேர் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 82,179 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,189 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
திங்கள்கிழமை காலை நிலவரப்படி 16 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு மற்றும் விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரம் ஆனது. 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,414 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,370 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 23,547 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 2357 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT