சங்காபிஷேகத்தை  முன்னிட்டு  108  சங்குகளுக்கு  சிறப்பு  பூஜை  நடத்திய  வேத பண்டிதர்கள்  மற்றும்  சிவாச்சாரியார்கள். 
செய்திகள்

நாவலூர் ஏகாம்பரேஸ்வரர்  கோயிலில் சங்காபிஷேகம்

நாவலூர் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உற்சவருக்கு கார்த்திகை மாத கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினமணி


நாவலூர் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உற்சவருக்கு கார்த்திகை மாத கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் சொரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் பகுதியில் பழைமையான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. 
இக்கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு மாகான்யம் முரளிதர சுவாமி ஆசிரமம் சார்பில் பம்மல் பாலாஜி தலைமையில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 
நிகழ்வில் சந்திரசேகர சிவாச்சாரியார், ரஞ்சித் சிவாச்சாரியார் மற்றும் நாவலூர் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT