செய்திகள்

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் டிச.14-இல் மகா பைரவருக்கு கும்பாபிஷேகம்

DIN


செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில்புரத்தில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் உள்ள அஷ்ட புஜ மகா பைரவர் சந்நிதியில் வரும் 14-ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
இக்கோயிலில் சகல காரியசித்திகளையும் அளிக்கவல்லதாகக் கருதப்படும் அஷ்டபுஜ மகா காலபைரவ மூர்த்தி விக்ரகமும், வாராகி, மாதங்கி, சூலினி, பிரத்யங்கிரா காளி முதலிய பரிவார மூர்த்தி விக்ரகங்களும் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இந்தச் சிலைகள், உலக நலன் வேண்டியும், தீவிரவாதம், வன்முறை, இயற்கைச் சீற்றங்கள், மனிதர்களின் கொடிய குணங்கள், தொற்று நோய்கள் உள்ளிட்ட எல்லா விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டி நிறுவப்பட உள்ளன.
அதன்படி, 12-ஆம் தேதி (புதன்கிழமை) காலை அஷ்டபந்தனம் சார்ந்தப்பட்டு சிலைகள் நிலைநிறுத்தப்படவுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி 3 நாள்களுக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சக்தி ஹோமம், பைரவர் ஹோமம், சாந்தி ஹோமம், கலச பூஜை, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும். 
அதைத் தொடர்ந்து 14-ஆம் தேதி காலை 7.30 முதல் 8.30 மணிக்குள் கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்த உள்ளனர். இதில் பங்கேற்று, சர்வ சித்திவிநாயகர், மகா காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்களின் அருளைப் பெற பக்தர்கள் வருமாறு கோயில் ஸ்தாபகர் தேவி குகயோகி மருளாளர் பு.மதுரைமுத்துசாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார். 
விழாவில் முன்னாள் வேலூர் ஆட்சியர் செ.இராஜேந்திரன் ஐஏஎஸ், ஆதிபரமேஸ்வரி தேவி ஸ்ரீகருமாரியம்மன்அறக்கட்டளை கௌரவத்தலைவர், காரப்பாக்கம் கங்கையம்மன் கோயில் அறக்கட்டளை தலைவர் லியோ என்.சுந்தரம், சோமசுந்தர சிவாச்சாரியார், தொழிலதிபர்கள், திருவடிசூலம் ஆலய ஸ்தபதிகள், பரம்பரை பூசாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT