செய்திகள்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடக்கம்

தினமணி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
விழாவையொட்டி சுவாமி சன்னதி முன் உள்ள தங்க கொடிமரத்தில் தலைமை குருக்கள்கள் உதயக்குமார் மற்றும் சிவமணி ஆகியோர் கொடி ஏற்றி வைத்தார். 
இதையடுத்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள்,விநாயகர், முருகன், நந்திகேசுவரர், சண்டிகேஷ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. 
இதனைத் தொடர்ந்து இரவு சுவாமி தங்க நந்திகேசுவர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்வும், வடக்கு நந்தவன கலையரங்களில் பக்தி இன்னிசை விழாவும் நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வாக 13 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 14 ஆம் ஆம் தேதி சுவாமி தேரோட்டமும், 15 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் என 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT