செய்திகள்

பழனிக்கு பறவை காவடியில் வந்த வால்பாறை பக்தர்கள் 

தினமணி

மாசி மாதத்துக் கிருத்திகையான நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வால்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, உடல் முழுவதும் அலகு குத்தியும், பறவைக் காவடி, பால்குடங்கள் எடுத்தும் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் தரிசனம் செய்தனர். 

மேலும், பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் காவடிகள், பால் குடங்கள் எடுத்து வந்தனர். பழனியில் சிறப்பு வாய்ந்த தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தக்ரள் குவிந்தனர். 

வின்ச், ரோப்கார் ஸ்டேஷன், அன்னதானக்கூடம் எனப் பக்தர்கள் கூட்டம் ஆங்காங்கு மணிக்கணக்கில் நின்றுகொண்டிருந்தன. முருகப்பெருமானைத் தரிசிக்க 2 மணி நேரத்திற்கு மேலாகப் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT