செய்திகள்

ஜூலை 27-ம் தேதி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முடியாது!

ஜூலை 27-ம் சந்திகிரகணம் என்பதால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடை சாத்தப்படும் என்று  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி

ஜூலை 27-ம் சந்திகிரகணம் என்பதால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடை சாத்தப்படும் என்று  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் மறுநாள் சனிக்கிழமை காலை 3.49 மணிக்கு முடிவடைகின்றது. 

ஆனால், சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஆறு மணி நேரத்திற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கு இக்கோயில் மூடப்பட உள்ளது. 28-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணிமுதல் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இதையொட்டி 27-ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 27ஆம் தேதி இரவு பௌர்ணமி கருடசேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கொலு, பஞ்சாஞ்கம் படித்தல் உள்ளிட்டவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராசிபுரம் அருகே 3 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

SCROLL FOR NEXT