செய்திகள்

மேனாம்பேடு ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹா ஹோமம்!

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள...

DIN

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மனோன்மணி உடனாய ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் சகல ஐஸ்வரியம் நல்கிடும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹாஹோமம் நடைபெறுகிறது. 

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விளம்பி வருடம் ஆடி மாதம் (4-ம் தேதி) 20.07.18 வெள்ளிக்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம் சித்த யோகம் துலா லக்னம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணியிலிருந்து ஹோமம் தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்குள் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மஹா ஹோமம் இறைவனின் திருவுள்ளத்தால் இனிதே நடைபெற உள்ளதாலி அனைத்து ஆன்மீக பக்தர்களும், சிவனடியார்களும், கிராம பொது மக்களும், நகர பொதுமக்களும் கலந்துகொண்டு பங்கேற்று எல்லாம் வல்ல மனோன்மணி அம்பிகை சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள் பெற வேண்டிக்கொள்கிறோம். 

நிகழ்ச்சி நிழல் 

19.07.18 வியாழன் காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவஜனம், கணபதி ஹோமம், விசேஷ திரவிய ஆஹீதிசமர்ப்பணம், மஹா பூரணாஹீதி தீபாராதனை.

20.07.18 வெள்ளி காலை 6.00 மணியிலிருந்து கணபதி பூஜை, புண்யாவஜனம், யாகசாலை பூஜை, சன்னவதி ஹோமம், மஹா பூரணாஹீதி, கலச அபிஷேகம் விசேஷ அலங்கார ஆராதனை பூஜை நடைபெறும். 

ஹோமத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1001 கட்டணத்தைச் செலுத்தி பங்கேற்கலாம். 

அஷ்டமி திதியில் வைரபரை வணங்குவது மிகவும் சாலசிறந்தது. சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டலஷ்மியும் வணங்குவதால் வணங்குபவர்க்கு அனைத்து நலன்களும் கிட்டும். 

இப்பேற்பட்ட ஹோமத்தில் கலந்துகொண்டு நம்முடைய கர்ம வினையால் ஏற்படுகின்ற கஷ்டங்களை தரித்திரத்தை போக்கி நாமும் குபேர நிலையை அடைய அனைவரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT