செய்திகள்

வேம்புலி அம்மன் கோயில் திருவிழா: ஆரணியில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி

DIN

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டாக ஆடித் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவையொட்டி, வரும் 20-ஆம் தேதி பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு உற்சவமும், வரும் 21-ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்கர்கணேஷின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த விழாவை முன்னிட்டு, புதன்கிழமை ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விழாக் குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.நடராஜன், விழாக்குழு நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஆறுமுக கவுண்டர், செல்வராஜ், பேராசிரியர் சிவா, ஏழுமலை, சங்கர், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

அபார வெற்றிக்குக் காத்திருக்கும் ராகுல் காந்தி!

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

காந்தி நகரில் தொடர்ந்து முன்னிலையில் அமித்ஷா!

SCROLL FOR NEXT