செய்திகள்

அமர்நாத்: 3,048 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு ஜம்முவில் இருந்து புறப்பாடு

PTI

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் புனித யாத்திரைக்கு ஜம்முவில் இருந்து புதிய யாத்ரீகர்கள் குழு ஒன்று இன்று புறப்பட்டுச் சென்றனர். 

கடந்த ஜூன் 28-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. 60 நாள் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை பால்தால் மற்றும் பஹல்காம் வழியாகப் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், 3,048 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு இன்று புறப்பட்டுள்ளனர். இதில், 623 பெண்கள் மற்றும் 144 சாதுக்கள் என மொத்தம் 122 வாகனங்களில் படுத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

இதில், 1, 973 யாத்ரீகர்கள் பஹல்காம் வழியாகவும், 1,075 யாத்ரீகர்கள் பால்தால் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று அமர்நாத் புனித யாத்திரை நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT