செய்திகள்

திருமலை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மாயம்: அதிர்ச்சியில் பக்தர்கள்

தினமணி

திருமலையில் பக்தர்கள் தங்கும் இரண்டாவது மண்டபத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற பக்தர் தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை திருப்பதிக்கு வந்தார்.
அவரும் குடும்பத்தினரும் திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் இரண்டாவது மண்டபத்தில் 1512- எஃப் என்ற எண் கொண்ட லாக்கரைப் பெற்றுக் கொண்டு அதில் கைபேசிகள், பணம் மற்றும் உடமைகளை வைத்து விட்டு தரிசனத்திற்கு சென்றனர். 
வெள்ளிக்கிழமை காலை தரிசனம் முடித்து திரும்பிய அவர்கள் லாக்கரில் வைத்திருந்த தங்கள் உடமைகளை எடுக்கச் சென்றனர். ஆனால் லாக்கர் காலியாக இருந்தது. அதில் உள்ள பூட்டு பூட்டிய நிலையில் இருக்க, பொருள்கள் மட்டும் காணாமல் போயிருந்தன. லாக்கரில் இருந்த பொருள்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து திருமலை குற்றவியல் போலீஸாரிடம் புகார் அளித்தனர். 
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT