செய்திகள்

சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழாவிற்காக இந்தாண்டு 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

DIN

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழாவிற்காக இந்தாண்டு 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

இந்நிலையில் வரும் ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் இன்று பார்வையிட்டார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை  6 நாட்கள் மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மலையில் பிளஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளில் அடிப்படையில் தண்ணீர் பாட்டில்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தனியார் வாகனங்கள் 7 கி.மீ தொலைவுக்கு முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பேருந்து மூலம் அடிவாரம் செல்ல வேண்டும். பக்தர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்க உள்ளனர். 

மலைக்குச் செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்குவதைக் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT