செய்திகள்

புதன் ஜென்ம லக்னத்துக்கு 6-ம் இடத்தில் இருந்தால் ஏற்படும் நோய்களும், பரிகாரங்களும்...!

DIN

சிலருக்கு நோய்கள் வந்தால் அவை விரைவில் குணமடைகின்றன. சிலருக்கு நீடிக்கின்றன. சிலர் ஆயுள் முழுதுமே நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். புதன் ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்துக்கு ஆறாம் இடத்தில் இருந்தால் என்னென்ன உடல் கெடுகள் உண்டாகும், என்னென்ன நோய்கள் உண்டாகும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர். புதபகவான் லக்னத்தில் இருக்கப்பிறந்தவர் நல்லவிதமாகக் கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், சமயோசித புத்தியுடன் பேசவல்லவராகவும், ஞானம் உள்ளவராகவும், தனதான்ய சுகங்கள் உள்ளவராகவும், சரீர சுகம் உள்ளவராகவும் இருப்பர். 

புதனால் ஏற்படும் நோய்கள் என்னென்ன? 

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் ஜென்ம லக்னத்துக்கு ஆறாம் இடத்திலிருந்தால் வாதம், பித்தம் இவை தொடர்பான ரோகத்தை அளிப்பார். சிலருக்கு வாக்கில் கெடுதலையும் (அதாவது தன் பேச்சினால் கேடு விளையும்), வாழ்கின்ற இடத்தில் பிரச்னையும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

மேலும், சுவர், மரம் இவற்றினாலும், வாகனங்களாலும், ஞாபக மறதியினாலும் கழுத்திற்பீடை நேத்திர ரோகம் உண்டாகும். மனதில் ஒருவித கலக்கம், கெட்ட சகவாசத்தினாலும் நேத்திர ரோகம் (கழுத்து, மூக்கு இவற்றில் உண்டாகும் ரோகம்) ஏற்படும். 

புத பகவான் பரிகாரம்

ஜாதகத்தில் புதன் பலமிழந்து இருந்தால் திருவென்காடு சென்று புத பகவானுக்கு உரியத் தானியமான பச்சை பயிர் படைத்து தரிசனம் செய்து வரலாம். புதன் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வரலாம். 

மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம் 
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகல்வபல கொடுக்க வல்லான்
புதன் கவி வுலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி!

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு 
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே 
உதவியே யருளும் உத்தமா போற்றி!

புதகிரஹாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி !!
தந்நோ ஸெளமிய ப்ரசோதயாத் !!

என்ற ஸ்லோகத்தைப் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT