செய்திகள்

தில்லை காளியம்மன் கோயிலில் இன்று தேரோட்ட திருவிழா

DIN

சிதம்பரத்தில் புகழ்பெற்ற தில்லை காளியம்மன் கோயிலில் இன்று தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 13 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து புதன்கிழமையான நாளை தீர்த்தவாரியும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும், 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT