செய்திகள்

மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

தினமணி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு 
நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கோயிலில் மாதம்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தைக் காண விழுப்புரம், கடலூர், சென்னை, புதுச்சேரி, வேலூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
பின்னர் இரவு 11.30 மணியளவில் மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக அங்காளம்மன், மலர் அலங்காரத்துடன் கமலாம்பிகை அம்மன் ரூபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து, பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனுக்கு தாலாட்டு பாடல் பாடினர். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் எலுமிச்சை பழம், தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ரமேஷ், ஏழுமலை, சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT