செய்திகள்

பழனி பஞ்சாமிருதம் காலாவதி தேதியுடன் விற்பனை: மக்கள் வரவேற்பு

பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

தினமணி

பழனி: பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் காலாவதி விபரம் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். காஞ்சிபுரம் இட்லி, மதுரையில் புட்டு, திருப்பதியில் லட்டு என ஒவ்வொரு கோயிலிலும் வழங்கப்படும் பிரசாதங்கள் பிரபலமானவை. அந்தவகையில், பழனி என்றாலே பஞ்சாமிருதம் தான் நினைவுக்கு வரும். 

இதற்கு முன்னதாக, கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிருதம் தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும் உணவுப்பொருளாக இருப்பதால் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். 

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலைத்துறையின் ஆலோசனையின் படி பழனி முருகன் கோயிலில் தயாரித்து விநியோகிக்கப்படும் பஞ்சாமிருதம் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று டப்பாவில் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

தயாரிப்பு தேதியுடன் விற்பனை செய்யும் இந்த முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT