செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் மார்ச் 30-ல் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் வரும் 30-ம் நடைபெற உள்ளது. 

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் வரும் 30-ம் நடைபெற உள்ளது. 

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும் அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. 

இதன் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வரும் 30-ம் தேதி நிகழ உள்ளது. அன்று மாலை கொடிமரம் முன்புறம் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும். 

தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 3-ல் ஊஞ்சல் உற்சவமும், 4-ம் தேதி பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT