செய்திகள்

சாஸ்திரப்படி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பலன்? 

தினமணி

நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நாம் சாப்பிடும் உணவு மட்டும் போதாது. நாம் எந்த திசையில் அமர்ந்து உணவை உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நமது ஆரோக்கியம் இருக்கிறது என சாஸ்திரம் கூறுகிறது. 

உணவு உட்கொள்ள உகந்த திசை இதுதான்..

ஒருவேளை உணவு சாப்பிடுபவர்கள் யோகிகள். இருவேளை உணவு உண்பவன் போகி (அனுபவிக்கப் பிறந்தவன்). மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி (நோயாளி) என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்தத் திசையில் அமர்ந்து உண்டால் என்ன பலன்? 

• கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும், ஆயுள் விருத்தியாகும்.

• மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்.

• வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படும் நிலை உண்டாகும்.

• தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அழியாப் புகழ் உண்டாகும்.

ஏன் இப்படி கூறுகிறார்கள்?

கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது. மேற்கு திசை செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்குரியது. வடக்கு திசை சிவனுக்குரியது. தெற்கு திசை எமனுக்குரியது.

அதேபோல், ஒருவர் தங்களது வீட்டை தவிர்த்து உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த உறவு பகையாகிவிடும் என்பது சாஸ்திரம் கூறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT