செய்திகள்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

DIN

சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று காலை தொடங்கியது. 

சென்னை, தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்ச விழா இன்று தொடங்கியுள்ளது. 

குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராணங்கள் கூறுகின்றது.  மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பிரம்மோற்சவ விழாவில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெறுவோமாக. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT