செய்திகள்

பாடலீஸ்வரா பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க வலம் வந்த திருத்தேர்!

கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

DIN

கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

வைகாசி பெருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதகை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், நடைபெற்றது. 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பாடலீஸ்வரா பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல் தானம்!

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

SCROLL FOR NEXT