முகப்பு
செய்திகள்

ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்கள் எந்த வகையான உணவைத் தவிர்த்தால் நல்லது? 

ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த உணவைத் தவிர்த்தால் உடல் நலம் பாதுகாக்கப்படும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

உணவே மருந்து மருந்தே உணவு என்பது திருமூலர் வாக்கு. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கை மட்டுமே சிறந்த கடவுள். மனிதர்களுக்குத் தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வைப் பெற முடியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜோதிட ரீதியாக எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த உணவைத் தவிர்த்தால் உடல் நலம் பாதுகாப்பாக இருக்கும் என்பதைக் குறித்து தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி பார்ப்போம். 

உணவு பரிகாரம்

மேஷம் மற்றும் மகர ராசியினர் புளிப்பு சார்ந்த உணவுப்பொருட்களைத் தவிப்பது உடல்நலத்திற்கு நல்லது. 

ரிஷபம், தனுசு மற்றும் கும்ப ராசியினர் இனிப்பு அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது. 

மிதுன ராசியினர் உட்கொள்ளும் உணவில் உப்பை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். 

கடகம் மற்றும் துலா ராசியினர் பித்தம் சார்ந்த உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. 

சிம்மம் மற்றும் கன்னி ராசியினர் எண்ணை மற்றும் துவர்ப்பை  அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

விருச்சிகம் மற்றும் மீன ராசியினர் காரம் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். 
 

முழு கட்டுரையைப் படிக்க →