திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவ.8-ல் கந்தசஷ்டித் திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:43 PM
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா நவ.8-ம் தேதியன்று தொடங்கி நவ.18-ம் தேதியன்று முடிவுறுகிறது.
ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான கந்தசஷ்டி விழா நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது. நவ.13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குமேல் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், நடைபெற உள்ளது.
முருகனடியார்கள் அனைவரும் வருகைபுரிந்து நோன்பு நோற்று கந்தசஷ்டி வேள்விச்சாலை பூஜையில் கலந்துகொண்டு வெள்ளி, செம்பு இரட்சைத் தகடுகள் அணிந்து செந்தில் வாழ் கந்தனின் திருவருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
Advertisement