செய்திகள்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக்..

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 2 கி மீ. தூரத்திற்குப் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கமுடியாமல் சிலர் இரும்பு கேட்டுகளை உடைத்து சாமி தரிசனத்திற்குச் செல்ல முயன்றதால் பக்தர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது. இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்குச் சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி உத்தரவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT