செய்திகள்

எவ்வளவு காற்று அடித்தாலும் அசையாமல், ஆடாமல் நின்று எரியும் அதிசயத் திருவிளக்குகள்!

தினமணி

நாமக்கல் மாவட்டம், மோகனூர் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அசல தீபேசுவரர் திருக்கோயில் கருவறை விளக்குகள் திருச்சுடர், எவ்வளவு காற்று அடித்தாலும் அசையாமலும் ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து பிரகாசமாக ஒளிர்வதைத் தரிசிக்கலாம்.

திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளஹஸ்தி நாதர் திருக்கோயிலின் கருவறைத் திருவிளக்குகளில் ஒரு திருச்சுடர் மட்டும் காற்றால் தாக்கப்படுவதைப் போல் எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். அந்தத் திருச்சுடரின் நடனக்கோலம், "வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான்' என்பதை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

திருச்சி, மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள திருத்தலம் திருப்பைஞீலி. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ நீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதிலாக ஒன்பது குழிகளே உள்ளன. அவற்றில் நெய் வார்த்து, திரியிட்டு விளக்கேற்றி அந்த ஒன்பது சுடர்களை நவக்கிரகங்களாக வழிபடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT