செய்திகள்

பௌர்ணமியில் செய்ய வேண்டிய அபிஷேகங்களும், அதன் பலன்களும்!

ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியன்று அன்னம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது..

DIN

ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியன்று அன்னம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது போன்று, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று ஈசனுக்குச் சிறப்பான அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும்.

தமிழ் மாதம் - அபிஷேகப் பொருள்களும், அதன் பலன்களும்

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியன்று மருக்கொழுந்து கொண்டு அபிஷேகம் செய்தால் புகழ் உண்டாகும்.

வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சந்தன அபிஷேகம் செய்தால் மனை, வீடு, நிலம், புதையல் கிடைக்கும்

ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமியில் முக்கனி (மா, பலா, வாழை கொண்டு அபிஷேகம் செய்து வர கேட்ட வரம் கிடைக்கும்.

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று காராம் பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் எம பயம் நீங்கும்.

ஆவணியில் வரும் பௌர்ணமியன்று வெல்ல சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்து வந்தால் சாபம், தோஷம், பாவம் நீங்கும்.

புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் கோதுமை பசுநெய் கலந்த வெல்ல அப்பம் படைத்து வர அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும்.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வர கல்வி, கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்.

கார்த்திகையில் வரும் பௌர்ணமியன்று பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்து தாமரை நூல் தீபம் ஏற்றிவரப் பழி தீரும், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமியில் பசு நெய் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர, கண்டம் நீங்கி ஆயுள் கூடும்.

தை பௌர்ணமியன்று கருப்புசாறு கொண்டு அபிஷேகம் செய்து வர நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று பசுநெய்யில் நனைத்த கம்பளி வழங்க குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பங்குனியில் வரும் பௌர்ணமியில் பசுந்தயிர் அபிஷேகம் செய்துவர நல்ல மனைவி, மக்கள் கிடைப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT