முகப்பு
செய்திகள்

திருமலையில் கிருஷ்ண ஜயந்தி

திருமலையில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கோகர்ப்பம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:30 AM
பகிர்:


திருமலையில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கோகர்ப்பம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கோகர்ப்பம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. 
அதன்படி திங்கள்கிழமை ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, கிருஷ்ணருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் இருந்து அர்ச்சகர்கள் குழு அங்கு சென்று கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதன்பின் அங்கு இளைஞர்கள் அனைவரும் இணைந்து உட்லோற்சவம்' எனப்படும் உறியடித் திருவிழாவை நடத்தினர். இதையடுத்து, அங்கு குழுமிருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் பிரசாதம் வழங்கியது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று உறியடித் திருவிழா

திருமலையில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ஆஸ்தானம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 4), உறியடித் திருவிழா நடைபெற உள்ளது. 
திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நட்சத்திரத்தன்று ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கோயிலில் உள்ள தங்க வாசல் அருகில் திங்கள்கிழமை இரவு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணர் சிலையை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து அவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து ஆஸ்தானத்தை அர்ச்சகர்கள் நடத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
அடுத்ததாக, ஏழுமலையான் கோயிலுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை, உறியடித் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா, தெலுங்கில் உட்லோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது.


திருமலையில் காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு நடைபெற்ற அபிஷேகம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.