செய்திகள்

மும்பையில் 70 கிலோ தங்க நகையுடன் ஜொலித்த பிரம்மாண்ட கணபதி!

தினமணி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 70 கிலோ தங்கம் உள்ளிட்ட நகைகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கௌட் சரஸ்வத் பிரம்மன் என்ற குழு, கடந்த 64 வருடங்களாகப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 70 கிலோ தங்கள் மற்றும் 350 கிலோ வெள்ளியைக் கொண்டு ஆபரணங்களைச் செய்து விநாயகர் சிலைக்கு அணிவித்துள்ளது. 

இந்த நகைகளுக்காகவே 264.75 கோடி ரூபாய்க்கு விநாயகர் சிலை காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் இருந்து ஐந்து நாட்களுக்கு மக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு கருதி 65 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மதிப்புமிக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT