செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருமலைக்கு புறப்பட்டது

தினமணி

திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் வெங்கடேசபெருமாள் சாற்றிக் கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மங்கள பொருள்கள் அனுப்பும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 5-ஆம் திருநாளான கருட சேவையின்போது மோகினி அலங்காரத்தில் உற்சவருக்கும், தோமாலை சேவையின் போது மூலவருக்கும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மங்களப் பொருள்கள் வெங்கடேசபெருமாளுக்கு சாற்றப்படும். இந்த ஆண்டு, திருமலையில் இந்நிகழ்ச்சி திங்கள்கிழமை (செப்.17) நடைபெறுகிறது.
 இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாளுக்கு விசேஷ மாலைகள், கிளி, பட்டு வஸ்திரம், பரிவட்டம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் சாற்றப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
 பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மங்களப் பொருள்கள் மாட வீதிகளின் வழியே எடுத்துவரப்பட்டு, கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், திருப்பதிக்கு அவற்றை எடுத்துச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT