செய்திகள்

திருக்கழுகுன்றத்தில் மகா ஸ்படிக லிங்க தரிசனம்

DIN

திருக்கழுக்குன்றத்தில் வேதமலை வல பெருவிழாக் குழு அகஸ்திய கிருபா சார்பில் வேதகிரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டிருந்த மகா ஸ்படிக லிங்கத்தினை பொதுமக்களும், இறை அன்பர்களும் தரிசனம் செய்தனர்.
உலக நலனுக்காகவும், செல்வத் தடை நீக்கி தனம் பெருகச் செய்யும், நாடு சுபிட்சமாக இருக்கவும் வேண்டி திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழாக்குழு அகஸ்திய கிருபா நிர்வாகிகள் இணைந்து புதிதாக பிரதிஷ்டை செய்வதற்காக ஒன்றரைஅடி உயரத்தில் அபூர்வமான மஹா
ஸ்படிக லிங்ககத்தை உருவாக்கச் செய்ததனர். இந்த மகா ஸ்படிக லிங்கம் திண்டுக்கல் நவாமரத்துப்பட்டில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 
இந்த அபூர்வ லிங்கம் பொதுமக்கள் மற்றும் இறை அன்பர்கள் தரிசனம் செய்வதற்காக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை அடிவாரத்தில் உள்ள ராஜம் மகால் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை வரை வைக்கப்பட்டது. 
இதையொட்டி யாக குண்டம் அமைக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, சாந்தி ஹோமம், கலச பூஜை பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டன. மஹாதீபாராதனை காட்டப்பட்டதோடு, ஸ்படிக லிங்கத்திற்கு ஏகாதச ருத்ர அபிஷேகம் மற்றும் பாராயணம் நடைபெற்றது. 
திரளான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அபிஷேகப் பொருள்கள், வில்வ இலைகள், பலவகையான மலர்கள் ஆகியவற்றை அளித்ததோடு, மகா ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்தனர். அவர்கள் தங்கள் கைகளால் வில்வ இலை, மலர்கள் ஆகியவற்றைச் செலுத்தி வணங்கினர். விழாவில் உளுந்தூர்பேட்டை அப்பர்சாமி மடத்தின் பீடாதிபதி கலந்துகொண்டு ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார்.
விழாவையொட்டி அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை வேத மலைவல பெருவிழாக் குழுவின் தலைவர் 
தி.கா.துரை, ஜே.குமார், அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன், நிர்வாகிகள் டி.சி.வேதகிரி, எஸ்.ராஜவேல், மோகன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ஜெகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT