செய்திகள்

திருப்பதி: ஏப்ரல் மாத சிறப்பு தரிசன தேதிகள் அறிவிப்பு

DIN


மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ள இலவச சிறப்பு தரிசனங்களுக்கான தேதிகளை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 
திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி வரும் 9, 16 உள்ளிட்ட தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் இரு நாள்களில் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. 
அதேபோல் ஏப்.10, 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சுபதம் பகுதி வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT