செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் தத்துவமும், பலனும்!

தினமணி

சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

மூன்றாம் நாள் திருவிழா தத்துவமும், பலனும்..

மூன்றாம் நாள் திருவிழா மூவிணையும், முப்புத்தியும், முக்குணமும், மும்மலமும், முப்பிறப்பும், முக்குற்றமும், முப்பற்றும் முதலானவற்றை ஒழித்தற் பொருட்டாகும். 

மூன்றாம் நாள் இரவு இராவணனது உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளுகிறான். இவ்வாகனம் கைலாச பர்வத வாகனம் எனக் கூறப்படும். இராவணன் ஆணவ மலம் முதிர்ந்த ஜீவாத்மா.

அகங்காரத்தால் எதுவும் செய்யக்கூசாதவன். அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தைத் தூக்கி எடுக்க, சிவபெருமான் கால்விரலை ஊன்ற, அவன் அலறி கை நரம்பால் வீணை உண்டாக்கி சாம கானம் பாடினார். இறைவன் மகிழ்ந்து அவனுக்கு அருள்புரிந்தார். 

இது ஸ்திதி அல்லது காப்பாற்றுதலைக் குறிக்கும். இதிலிருந்து இறைவனுக்குத் தீங்கு செய்தவர்களும் அடங்கி நின்று  வழிபடுவாராயின் அவனுக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும், அவனது பெருந்தகைமையும் நன்கு விளங்குகின்றது. 

இதன்படி, இன்று காலை 7.00 மணிக்கு கோயிலுக்குள் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் இறைவன் எழுந்தருளினார். இரவு 7.00 மணிக்கு கைலாசபர்வதம் - காமதேனு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT