செய்திகள்

மேலநத்தம் மண்டகப்படி சுடலைமாடசாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

DIN

மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலைமாடசாமி கோயிலில்  இன்று  காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

இக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கும்பாபிஷேக விழா சனிக்கிழமை (ஏப். 20) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு 7மணிக்கு ரக்ஷாபந்தனம், கும்ப அலங்கார பூஜை, முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான  நேற்று(ஏப். 21) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், மாலையில் திருமுறை பாராயணம், வேத பாராயணம், மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு யந்திரஸ்தாபனம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து, இன்று காலை உள்ளூர் ஆதிபூடம் சுடலைமாடசாமிக்கு கும்பாபிஷேகமும், காலை 9 மணிக்கு ஆற்றங்கரை சுடலைமாடசாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. முற்பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT