செய்திகள்

கச்சபேஸ்வரர் கோயில் உத்திரப் பெருவிழா நிறைவு

DIN


காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 
இக்கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழா கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பூதம், நாகம், நந்தி, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. திருக்கயிலைக் காட்சி, திருக்கல்யாணம், மகாரதம், வெள்ளித் தேர், ஊஞ்சல் சேவை, சங்காபிஷேகம், தீர்த்தவாரி, நடராஜர் தரிசனம், முருக்கடி சேவை உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது. அப்போது உற்சவர் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
தொடர்ந்து, 17 நாள்கள் விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவின் நிறைவாக செவ்வாய்க்கிழமை புஷ்பப் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. அப்போது, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT