அத்திவரதர் பெருவிழாவைக் காண வரும் பக்தர்களைச் சிறப்புக் கூடாரங்கள் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. முதல் 31 நாட்கள் சயனக் கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.
வைபவத்தின் 44-ம் நாளான இன்று கிளி பச்சை பட்டு உடுத்திப் பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். கடந்த 43 நாட்களில் சுமார் 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் அத்திவரதர் வைபவ விழா நிறைவடையவுள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்கள் அலை அலையாய் காஞ்சிபுரத்தில் திரண்டுள்ளதால் பக்தர்களைச் சிறப்புக் கூடாரங்கள் அமைத்து பக்தர்கள் தங்க வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.