செய்திகள்

திருமலை: உண்டியல் காணிக்கை ரூ3.88 கோடி

DIN


திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.88 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.88 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

73,256 பேர் தரிசனம்
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 73,256 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 36,778 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 6 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT