செய்திகள்

அத்திவரதரை தரிசிக்கவில்லையே என்ற கவலையா? (விடியோ)

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியேவந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு

தினமணி


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியேவந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்துவிட்டு, மீண்டும் குளத்திற்குள் சயனிக்க சென்றுவிட்டார் அத்திவரதர். நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் அத்திவரதரை காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இருந்தாலும், பலர் கூட்டத்தின் காரணமாக பயந்து அத்திவரதரை தரிசிக்கமால் விட்டுவிட்டுனர். இவர்களுக்கெல்லாம் அத்திவரதரை பார்க்கமுடியலையே என்ற கவலை மனசுல ஒரு ஓரமா இருக்கசெதாங்க செய்யுது. 

சரி, காஞ்சிபுரத்தை தவிர வேறு எங்காவது, அத்திமரத்தால் செய்யப்பட்ட பெருமாள் இருக்கார, அப்படினா நிச்சயம் இருக்கிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி என்னும் கிராமத்தில் பழமையான வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் போகும் வழியில் கல்லணை செல்லும் சாலையில் சோழன்பேட்டை கிராமத்துக்கு பக்கத்தில் காவேரி கரையில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது. 

வானமுட்டி பெருமாள் பெயரை போலவே 14 அடி உயரத்தில் 6 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக விஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறார். பெருமாள் காலில் வேரே திருவடியை தாங்கிநிற்பது மேலும் இத்தலத்தின் சிறப்பாகும்.

கோயில் வரலாறு அப்படினா முன்னொருகாலத்தில் பிப்பிலர் என்ற மன்னருக்கு தீராத தோல் நோய் இருந்துவந்தது. வானமுட்டி பெருமாள் ஆலயத்துக்கு அருகில் உள்ள தீர்த்தக்கரையில் குளித்து, பாவ விமோசனம் அடைந்தார். மகிழ்ந்த மன்னனுக்கு பெருமாள் திருக்காட்சியளித்தார். 

மன்னரின் நோய் தீர்ந்ததால் இத்தலத்திற்கு கோடிஹத்தி எனப் பெயர்பெற்றது. நாளடைவில் மருவி கோழிகுத்தி என்று அழைக்கப்பட்டது. மூலவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் இந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை தைலக்காப்பு மட்டும்தான். 

1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தலத்தில் மேற்கு நோக்கி தனிச்சந்நிதியில் சப்த ஸ்வரூப ஆஞ்சநேயர் வாலை சுருட்டி தலையில் வைத்து வாலின் நுனியில் மணி தொங்கும் அற்புத தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். இவரின் உடலைத் தட்டினால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஒலி வருவதாக சொல்லப்படுகிறது. சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் இன்னல்கள் நீங்கும் என்கின்றனர்.

கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாளை தரிசித்தால் திருப்பதி சீனிவாசப் பெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், காஞ்சிபுரம் அத்திவரதர் மூவரையும் ஒருசேர வணங்கிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

SCROLL FOR NEXT