செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மயில் வாகனத்தில் காட்சிதரும் செல்லப் பிள்ளையார்!

விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு.. 

DIN

விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார்.

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.

- டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ்ஸை பார்த்துக் கற்றுக்கொண்ட பிறகு விஜய் விமர்சிக்கட்டும்: எல். முருகன்

சுந்தரப் பார்வை... தேஜஸ்வினி கெளடா!

ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!

புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

கடவுளின் ஆசி... நிக்கி கல்ராணி - ஆதி!

SCROLL FOR NEXT