செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நாளை மாசித் தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி

தினமணி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித்  திருவிழாவையொட்டி நாளை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 9-ம் நாளான இன்று சுவாமி தங்க கைலாய பர்வத  வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான நாளை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும்  தேரோட்டம் நடக்கிறது. 

20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும், 21-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கச் சிலை... பூமி பெட்னெகர்!

கமல்ஹாசன் தயாரிப்பில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி!

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

SCROLL FOR NEXT