செய்திகள்

ஜனவரியில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்: குலுக்கல் முறையில் பக்தர்கள் பெற வாய்ப்பு

DIN


ஜனவரி மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளம் மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்து விடுகின்றனர்.
அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளித்து வருகிறது. 
இந்த டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து, சேவா டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். 
தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்று, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம்.
அதன்படி, ஜனவரி மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT