செய்திகள்

3-வது நாளில் பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகை மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்

தினமணி

அத்திவரதர் பெருவிழாவையொட்டி 3-வது நாளான இன்று பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ மாலையுடன் ஆதி அத்திவரதர் காட்சியளிக்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இவ்விழாவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்ய நாடு முடிவதிலுமிருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர். 

இரண்டாவது நாளான நேற்று அத்திவரதர் நீல வண்ண அரக்கு பட்டு ஆடையில் பக்தர்களுக்கு தெய்வாம்சக் காட்சியுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். இந்த அரிய காட்சியை காண அலை அலையாய் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர். 

தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்று பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ மாலையுடன் ஆதி அத்திவரதர் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT