செய்திகள்

திருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா!

தினமணி


திருமலையில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்கள் அனைத்தும் 11 மணி நேரம் மூடப்பட உள்ளன.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நள்ளிரவு 1.40 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4.39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நிகழ்வதற்கு 6 மணிநேரத்துக்கு முன்பாக, தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்கள் மூடப்படுவது வழக்கம். 

அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களும் மூடப்பட உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் கோயில்களைத் திறந்து சுத்தி, புண்ணியாவாசனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, அதன் பிறகே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 

முன்னதாக, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ள கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்' என்ற தூய்மைப்படுத்தும் பணிக்காக அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

எனவே, அன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணிவரை தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர். மற்ற தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சந்திரகிரகணத்தை முன்னிட்டு பௌர்ணமி இரவு நடைபெறும் கருட சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT