செய்திகள்

ஒரே நாளில் கட்டுக்கடங்காத கூட்டம்: போக்குவரத்து நெரிசலில் திணறும் காஞ்சிபுரம்!!

தினமணி

அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து 18-ம் நாளில் இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றார். இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். 

கடந்த செவ்வாயன்று சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலானோர் கோயிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். மக்கள் வானங்களை, காஞ்சிபுரம் காந்தி சாலை வழியாகக் கொண்டு வந்ததால், இன்று காலை முதலே வாலாஜாபாத் செல்லக்கூடிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

அத்திகிரி அருளாளன் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!

இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூரிலிருந்து காஞ்சிபுரம் வந்து தங்கியுள்ள மக்களும் இன்று ஒருநாள் மட்டும் அத்திவரதர் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, காஞ்சிபுரம் வரும் பக்தர்கள் அவசரப்படாமல் பொறுமையாகவும், நிதானமாகவும் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து செல்லுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT