செய்திகள்

அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி 

தினமணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை காண நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. கடந்த 21 நாட்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், 

அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அருள்பாலித்துவரும் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது. அத்திவரதர் வெளியே வந்ததால் தான் மழை பெய்கிறது. எனவே, அத்திவரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்க தேவையில்லை. அவரை குளத்தில் வைப்பது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர். ஆனால், தற்போது அது தேவையில்லை என்பதால் அனைவரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT