செய்திகள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

ஆனி மாத பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 

DIN


ஆனி மாத பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜைகள் மற்றும் தமிழ் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றவுள்ளார். இரவு 10.00 மணிக்கு நடை  அடைக்கப்பட்டு, மீண்டும் நாளை அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் நடைபெறும். 

தொடர்ந்து சகஸ்ர கலச பூஜையும் நடைபெறும். இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை  அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT